Home உலகம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: சீனா முதல் தங்கத்தை வென்றது!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: சீனா முதல் தங்கத்தை வென்றது!

481
0
SHARE
Ad

பாரிஸ்: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எப்போதுமே அதிரடி படைக்கும் நாடு சீனா. வெள்ளிக்கிழமை (ஜூலை 26) ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் நேற்று சனிக்கிழமை (ஜூலை 27) முதல் நாள் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் முதல் நாடாக சீனா திகழ்கிறது.

துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் முதல் தங்கத்தை சீனா வென்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) காலை நிலவரப்படி 3 தங்கப்பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் நிலையிலும் 2 தங்கப் பதக்கங்களுடன் சீனா இரண்டாவது நிலையிலும் 1 தங்கப்பதக்கத்துடன் அமெரிக்கா மூன்றாவது நிலையிலும் இருக்கின்றன.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

 

Comments