சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது ‘வேட்டையன்’ திரைப்படம். என்கவுண்டர் என்னும் குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்களைக் கொண்ட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
திடீரென ரஜினி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்டையன் வெளியாவதால், ரசிகர்களுக்கு படத்தைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதனால், தமிழ் நாட்டில் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான முன்பதிவுகள் பரபரப்பாக அதிகரித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே. இந்தப் படத்தில், அனிருத் இசையில் இடம் பெற்ற ‘மனசிலாயோ’ பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘வேட்டையன்’. உண்மைச் சம்பவங்களை குறிப்பாக காவல் துறையினரால் என்கவுண்டர் என்ற பெயரில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதை விவரிக்கிறது படத்தின் திரைக்கதை.
வேட்டையன் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: