Home Video ‘கங்குவா’ நவம்பர் 14-இல் வெளியாகிறது – மிரட்டும் முன்னோட்டம்!

‘கங்குவா’ நவம்பர் 14-இல் வெளியாகிறது – மிரட்டும் முன்னோட்டம்!

258
0
SHARE
Ad

சென்னை : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 14) உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கங்குவா’.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்.சூர்யா இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். வில்லனாக போபி டியோல் நடித்திருக்கிறார். ஏற்கனவே ‘அனிமல்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர்.

38 மொழிகளில் வெளியாகிறது கங்குவா. இந்தப் படத்தின் முன்னோட்டம் 2 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு யூடியூப் தளத்தில் மட்டும் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

#TamilSchoolmychoice

புதுமையான திரைக்கதையைக் கொண்டிருக்கும் படம் என்பது முன்னோட்டத்தின் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்திருக்கும் படம். மலேசியத் திரையரங்குகளிலும் கங்குவா நாளை வெளியிடப்படுகிறது.

கங்குவா படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: