Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ஆட்டம் : அத்தியாயம் 1 & 2 – சிறப்புக் கூறுகள்

ஆஸ்ட்ரோ ஆட்டம் : அத்தியாயம் 1 & 2 – சிறப்புக் கூறுகள்

131
0
SHARE
Ad

சிறந்த 11 அணிகளை ‘ஆட்டம்’ அறிவித்தது

டிசம்பர் 7 மற்றும் 8, தொடங்கி இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் இரண்டு அத்தியாயங்களின் ஒளிபரப்பைத் தொடர்ந்து ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான ஆட்டம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் சிறந்த 11 அணிகளை அறிவித்தது.

சிறந்த 11 அணிகளின் விபரங்கள் பின்வருமாறு:

அனிருத்தின் பாடல்கள் என்றக் கருப்பொருளைக் கொண்ட இவ்வத்தியாயங்களில் 100% புள்ளிகள் உள்ளூர் கலைஞர்களானப் புகழ்பெற்ற நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே. நாடா; தொகுப்பாளர், நடனக் கலைஞர், உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டும்மல்லாது ஆட்டம் 100 வாகையின்
தொகுப்பாளருமான, அருணா; மற்றும் சிங்கப்பூரின் நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் மற்றும் ஆட்டம் 100 வாகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வரா ஆகிய நடுவர்கள் குழுவால் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

படைப்புக்கு 30%; ஆற்றலுக்கு 25%; படைப்பாற்றல், நடனப் பாணிகள் மற்றும் நடன
வடிவம் ஆகியவற்றிக்கு 30%; மற்றும் இடம் மற்றும் உருவாக்கம் ஆகியவற்றுக்கு  15% எனும் அடிப்படையில் டெனெஸ் குமார் மற்றும் விகடகவி மகேன் ஆகியோர்
தொகுத்து வழங்கும் இப்போட்டியின் புள்ளிகள் வழங்கப்பட்டது.

போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச்
செல்வர்:

o முதலாம் பரிசு: ரிம50,000.00
o இரண்டாம் பரிசு: ரிம25,000.00
o முன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம5,000.00;
மற்றும்
o ஐந்தாம் மற்றும் ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம2,000.00

ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
 மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.