Home Video அயலகத் தமிழர் தினம் 2025 – ஜனவரி 11, 12 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!

அயலகத் தமிழர் தினம் 2025 – ஜனவரி 11, 12 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!

1313
0
SHARE
Ad

சென்னை : 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகின்றன.

ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர் தினம் மாநாடு கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

2024-ஆம் ஆண்டுக்கான மாநாடு கடந்த ஜனவரியில் நடைபெற்றபோது அதன் மைய நிகழ்வாக அமைந்தது அனைத்துலக அளவில் பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் தமிழ் பிரமுகர்களுக்கு கணியன் பூங்குன்றனார் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதாகும்.

#TamilSchoolmychoice

மலேசியாவின் சார்பில் ம.இ.கா துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு அவரின் சமுதாய சேவைகளைப் பாராட்டும் கௌரவிக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2024-ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் சிறப்பு அங்கமாக நடைபெற்ற “ஒளிரும் எதிர்காலம்- வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் அமர்வு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மலேசியாவின் கணினித் துறை வல்லுனர் முத்து நெடுமாறன் உரையாளர்களில் ஒருவராக சிறப்புரை நிகழ்த்தினார்.

2025-ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் தினம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்யவும் கீழ்க்காணும் இணையத் தளத்தை அணுகலாம்:

https://nrtamils.tn.gov.in/

2025-ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் தினம் குறித்த விவரங்களைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: