Home Photo News அயலகத் தமிழர் தினம் : மலேசியப் பேராளர்களைச் சந்தித்த ஸ்டாலின்

அயலகத் தமிழர் தினம் : மலேசியப் பேராளர்களைச் சந்தித்த ஸ்டாலின்

907
0
SHARE
Ad

சென்னை : இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மலேசியாவில் இருந்து பேராளர்களாகக் கலந்து கொண்டிருக்கும் மனித வள அமைச்சர் வி.சிவகுமார், மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரை ஸ்டாலின் சந்தித்து அளவளாவினார்.

#TamilSchoolmychoice

“கடலாலும் கண்டங்களாலும் பிரிந்திருந்தாலும் தமிழால் நம்மோடு இணைந்துள்ள உலகத் தமிழ்ச் சொந்தங்களுடன் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்தேன். தானும் உயர்ந்து வாழ்வளிக்கும் நாட்டையும் உயர்த்தும் அயலகத் தமிழர் நலன் காப்போம்! தாய்த் தமிழ்நாட்டுடனான மொழி – பண்பாட்டு உறவை வளர்ப்போம்!” எனவும் தன் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டார்.