வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முந்தைய மனைவிகளுக்கு மகன்களும் மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் டிரம்ப் அதிபராகப் பணியாற்றிய காலத்திலும், கடந்தாண்டு அவரின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் டிரம்பின் தற்போதைய மனைவி மெலானியா டிரம்ப் மூலம் டிரம்புக்குப் பிறந்த மகன் பேரோன் டிரம்ப் (Baron Trump) அதிகமாக வெளியிடங்களுக்கு வந்ததில்லை, பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 20) டிரம்ப் அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் முதன் முறையாக பதின்ம வயது பேரோன் டிரம்ப் கலந்து கொண்டார். 6 அடிக்கும் மேற்பட்ட உயரத்துடனும் அழகான தோற்றத்துடனும் கம்பீரமான உடல்வாகுடனும் தோற்றமளித்தார் பேரோன் டிரம்ப். தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றியே அடிக்கடி படம் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவரின் அழகான தோற்றத்தையும் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
பேரோன் வயது தற்போது 18-தான். இவர்தான் டிரம்பின் அடுத்த அரசியல் வாரிசாக உருவெடுப்பாரா என்ற ஆரூடங்களும் இப்போதே பரவத் தொடங்கிவிட்டன.