Home அரசியல் “ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது”- வழக்கறிஞர் ஆறுமுகம்

“ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது”- வழக்கறிஞர் ஆறுமுகம்

841
0
SHARE
Ad

Najib-2---Sliderகோலாலம்பூர்,ஜன.30- “ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விஷயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது” என வழக்கறிஞரும் சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான கா. ஆறுமுகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து செம்பருத்தி இணையத் தள பத்திரிக்கையிடம் கருத்து தெரிவித்துள்ள ஆறுமுகம் மேலும் கூறியிருப்பதாவது:

“ஹிண்ட்ராப் உருவாக்கியுள்ள செயல் திட்டமானது இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல் அல்லல் படும் சமூகங்களுக்கும் உகந்ததாக உள்ளது. இந்தியர்களின் ஓட்டுகளுக்காக அலையும் நஜிப் அதை ஏற்றுக்கொள்வதை ஒரு விவேகமான செயலாக கருதுவார்”

#TamilSchoolmychoice

“பெர்சே, பச்சை பேரணி, கல்விக்கடனுக்கு எதிரான பேரணி, மாதச் சம்பள பேரணி போன்றவை கோரும் மாற்றங்களைக் கொண்டு வர நஜிப் தவறி விட்டார். அடிப்படை கொள்கை அற்ற நிலையில் சுயநலத்தன்மையுடன் செயல்படும் அம்னோவின் தேசிய முன்னணியில், நஜிப் ஒரு பசு போல் தோன்றினாலும் அதனுள்ளே அம்னோ என்ற இனவாத புலி மறைந்துள்ளதை மறந்துவிட வேண்டாம்” என்கிறார் கா.ஆறுமுகம்.

மத்திய அரசாங்கத்தில் அரசியலில் மாற்றம் வராத வரையில் இந்தியர்களின் நிலை மாற வாய்ப்பில்லை. அம்னோவின் ஆதிக்கத்தை ஹிண்ட்ராப் தவறாக மதிப்பீடு செய்வது வரலாற்று தவறாக மாறிவிடும் என எச்சரித்த கா. ஆறுமுகம்; “மாற்றம் ஒன்றுதான் வழி என்ற வகையில் பொதுமக்கள் திரண்டு வரும் போது, கள்ள ஓட்டுகள் வழி அரசியல் நடத்த துணிந்துள்ள அம்னோவின் தேசிய முன்னணி பிரதமர் நஜிப்புடன் ஹிண்ட்ராப் பேச்சு வார்த்தை நடத்தி என்ன செய்யப்போகிறார்கள்?” என வினவுகிறார்.

எப்படியாவது ஆட்சியைப் பிடிப்போம் என்று கங்கணம் கட்டி வரிப்பணத்தைச் சீரழித்து, அந்நியர்களை வாக்காளர்களாக்கி, தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாக்கி, அரசு ஊடகங்களை கொண்டும், தனியார் நாளிதழ்களை மிரட்டியும் தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கும் அம்னோவின் தேசிய முன்னணியிடம் போராட்டவாதிகள் தங்களின் கொள்கைகளைப் பணயம் வைக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.