வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அடுத்தடுத்து பல உலகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்த டிரம்ப் அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறார்.
இந்த சந்திப்புக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் மோடி, அமெரிக்கத் துணையதிபர் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினரை இன்று புதன்கிழமை (பிப்ரவரி 12) சந்தித்தார்.
வான்ஸ் மனைவி உஷா இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். வான்ஸ்-உஷாவின் புதல்வர் விவேக்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொண்டார்.
வான்ஸ் குடும்பத்தினருடனான சந்திப்பும் அவர்களின் மகன் விவேக்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்ததாக மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.