சென்னை: ‘கோமாளி’ என்ற படத்தை ஜெயம் ரவியைக் (புதிய பெயர் ரவி மோகன்) கதாநாயகனாகக் கொண்டு இயக்கி திரையுலகை தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பின்னர் அவர் எடுத்ததுதான் அதிரடி முடிவு.
‘லவ் டுடே’ என்ற படத்தை தானே கதாநாயகனாக நடிக்க இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்திற்கான தயாரிப்பாளரைத் தேடும்போது படத்தை நீங்கள் இயக்குங்கள் ஆனால் கதாநாயகனாக வேறொரு பிரபலத்தைப் போடுவோம் என பல தயாரிப்பாளர்கள் கூறியும் பிரதீப் ஒப்புக் கொள்ளவில்லை. தானே கதாநாயகன் என்பதில் உறுதியாக இருந்தார். ‘லவ் டுடே’ படமும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது ‘டிராகன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரதீப். இயக்கியிருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. ‘ஓ மை கடவுளே’ என்ற முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்றவர் அஸ்வத் மாரிமுத்து.
டிராகன் எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு யூடியூப் தளத்தில் மட்டும் 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: