Home இந்தியா தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த 5 கட்சிகள் எவை தெரியுமா?

தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த 5 கட்சிகள் எவை தெரியுமா?

86
0
SHARE
Ad

சென்னை: பாஜக அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் தொகுதி எல்லை சீரமைப்பு, தமிழ் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக் காட்டவும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நேற்று புதன்கிழமை (மார்ச் 5) தமிழ் நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார்.

மொத்தம் 63 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் திமுகவின் எதிரணிக் கட்சியான அதிமுகவும் கலந்து கொண்டது. அதன் சார்பில் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்ததும் திமுக ஓரங்க நாடகம் நடத்துகிறது என ஜெயக்குமார் சாடியிருந்தார்.

#TamilSchoolmychoice

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 63 கட்சிகள் அழைக்கப்பட்டன. மொத்தம் 58 கட்சிகள் கலந்து கொண்டது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

எனினும் 5 கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தன. இவற்றில் சீமானின் நாம் தமிழர் தவிர மற்ற கட்சிகள் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் நேற்று காலை காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது.

இதன் மூலம் அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களின் கவனத்தையும் ஸ்டாலின் ஈர்த்திருக்கிறார்.