Home நாடு கிள்ளானில் தமிழிசை விழா 2025 தொடங்குகிறது!

கிள்ளானில் தமிழிசை விழா 2025 தொடங்குகிறது!

106
0
SHARE
Ad

இயல் இசை நாடக மன்றம், கிள்ளான் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் ஆதரவோடு தமிழிசை விழாவை இன்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. விழா ஆலயத்தின் நாவலர் மண்டபத்தில் நடைபெறும்.

தமிழிசை, திருமுறை,  திருப்புகழ் அரங்குகள், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, ஆய்வுரைகள் எனப் பல அங்கங்கள் இவ்விழாவில் இடம் பெறவிருக்கின்றன.

இன்று ஏப்ரல் 19 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்குத் தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும்.  நாளை 20 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 தொடங்கி இரவு 9.00 மணி வரை பல நிகழ்சிகள் நடைபெறவுள்ளன.

#TamilSchoolmychoice

கலைமாமணி TL மகராஜன் , இசைச்செல்வர் ஹைதராபாத் முனைவர் பா சிவா ஆகியோரின் இசை அரங்குகள்,  ஓதுவார் திரு சங்கர முத்தையா அவர்களின் திருமுறை இசை அரங்கம்,  அருள்வேந்தன் மனோகரன் தலைமையில் அருள் நுண்கலைப் பள்ளி மாணவர்களின் திருப்புகழ் இசை அரங்கம், திரு. இரகுராமன் அவர்களின் மலேசிய கவிஞர்களின் தமிழிசை பாடல் அரங்கம், தஞ்சை கமலா இந்திரா நாட்டியப் பள்ளியின் நாட்டிய நாடகம், மா.துருவன் குழுவினரின் வில்லுப்பாட்டு எனப் பல சிறப்பு அங்கங்கள் தாங்கி மலரவிருக்கிறது தமிழிசை விழா 2025.

நம் நாட்டில் தமிழிக்கும்  தமிழிசைக்கும் அளப்பரிய தொண்டாற்றிய நினைவில் வாழும் கலைஞர் செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம் அவர்களுக்கு ஏற்பாட்டுக்குழு இந்த விழாவைக் காணிக்கையாகுகிறது

தமிழிசையை மீட்டெடுத்தவர்களில் ஆப்ரகம் பண்டிதர் முக்கியமானர். அவரின் பேத்தி பேரா.முனைவர் அமுதா பாண்டியன் அவர்களும் நம் நாட்டின் தமிழறிஞர் திருமாவளவன் அவர்களும் தமிழிசைப் பற்றி உரையாற்றுவார்கள்.

தமிழிசை வளத்தையும் தொன்மையையும் பரைசாற்றும் விழாவாக தமிழிசை விழா 2025 அமையவிருக்கிறது. நாம் அனைவரும் இந் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து பயன்எய்தும் அதே வேளையில், நம் இளைய தலைமுறையை இதுபோன்ற நிகழ்ச்சிகளின் பங்கேற்கச் செய்து பண்படச் செய்வதும் அவசியமான ஒன்றாகும்

வாருங்கள்! இன்பத் தமிழிசையைப் பருகி மகிழுங்கள்.தொடர்புக்கு செயலாளர் இளவரசு நெடுமாறனை 016-3949265 என்ற எண்ணில்  தொடர்புகொள்ளலாம்.