Home நாடு “இதுவரை இருந்த மனிதவள அமைச்சர்களில் மோசமானவர்” – டாக்டர் சுப்ராவை எதிர்த்து வங்கி தொழிலாளர் சங்கம்...

“இதுவரை இருந்த மனிதவள அமைச்சர்களில் மோசமானவர்” – டாக்டர் சுப்ராவை எதிர்த்து வங்கி தொழிலாளர் சங்கம் செகாமாட்டில் பிரச்சாரம்

600
0
SHARE
Ad

J-Solomonபெட்டாலிங் ஜெயா, மே 1 – “மனித வள அமைச்சரும் செகாமாட் தொகுதியில் போட்டியிடுபவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தான் இதுவரை பதவி வகித்த மனித வள அமைச்சர்களின் மோசமானவர்” என்று வர்ணனை செய்துள்ள வங்கி தொழிலாளர் சங்கம், செகாமாட்டில் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து, அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று அத்தொகுதியில் உள்ள வாக்காளர்களைக் கேட்டுக் கொள்ளப்போவதாக தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ஜே.சோலமன் (படம்) கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் நடக்கவுள்ள இப்பிரச்சாரம், இன்று மே 1 தொழிலாளர் தினத்தன்று மாலை 5 மணியளவில் செகாமட்டில் உள்ள மலாயன் வங்கி (Maybank) கிளை முன்னும், நாளை மே 2 ஆம் தேதி, செகாமட்டில் உள்ள மேலும் இரண்டு வங்கிகள் மற்றும் மாலை 5 மணியளவில் சி.ஐ.எம்.பி வங்கி முன்னும் நடக்கும் என்று சோலமன் தெரிவித்தார்.

அதன் பின், மூன்றாவது நாளான மே 3 ஆம் தேதி, இப்பிரச்சாரக்குழு சுப்ரமணியத்திற்கு எதிராக 100,000 துண்டுக்காகிதங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்யவிருப்பதாகவும், அதில் வங்கி தொழிலாளர்களுக்கு எதிராக சுப்ரமணியம் எடுத்த மோசமான நடவடிக்கைகள் முக்கிய அம்சமாக கூறப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “சுப்ரமணியம் சங்களுக்கு எதிரானவர், தொழிலாளர்களுக்கு எதிரானவர், மலேசியர்களுக்கு எதிராக செயல்படுபவர், மலேசிய வங்கிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்பவர், அவர் அமைச்சர் பதவி வகிக்கவே தகுதி இல்லாதவர்” என்று சுப்ரமணியத்தின் மோசமான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாகவும் சோலமன் தெரிவித்தார்.

சங்கங்களுக்கு எதிராக செயல்படும் சுப்ரமணியம்

மனிதவள அமைச்சரான சுப்ரமணியம் இதுவரை வங்கித் தொழிலாளர் ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவருகிறார் என்று சோலமன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “55 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வங்கி தொழிலாளர் நல சங்கத்துடன், மலாயன் வங்கியின் தொழிலாளர் சங்கத்தை இணைப்பதற்கு சுப்ரமணியம் அனுமதியளிக்க மறுக்கிறார்.

இப்பிரச்சனை தொடர்பாக கடந்த வருடம் ஏப்ரல் 3 ஆம் தேதி கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி மரியா முகமட், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு சுப்ரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதோடு மலாயன் வங்கி தனது தொழிலாளர் நலன்களில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவருவதாகவும், ஆனால் வங்கித் தொழிலாளர் சங்கத்துடன் அதை  இணைக்கும் போது அது போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் காரணம் கூறியுள்ளார்.

வங்கி தொழிலாளர் சங்கம் அது போன்ற நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாது என்று எப்படி அவரால் உறுதியாகக் கூறமுடியும்.

வங்கி தொழிலாளர் நல சங்கம், மலேசிய வர்த்தக சங்க காங்கிரஸிடம் (Malaysian Trade Union Congress (MTUC)  இப்பிரச்சனை தொடர்பாக முறையிட்டு வருகிறது. ஆனால் சுப்ரமணியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வங்கி தொழிலாளர் சங்கத்தை ஒன்றாக இணைக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து வருகிறார் ” என்று சோலமன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுப்ரமணியத்தின் இது போன்ற மோசமான நடவடிக்கையால், வரும் பொதுத்தேர்தலில் அவர் தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிடும் தொகுதியான செகாமட்டில், அவருக்கு எதிராக வாக்குகள் திசை திரும்புவது நிச்சயம் என்றும் சோலமன் தெரிவித்தார்.

செகாமட் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வரும் சுப்ரமணியம், ம.இ.காவின் துணைத்தலைவராகவும், மனிதவள அமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செகாமட் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் நிலவரம் பின்வருமாறு,

செகாமட்