Home அரசியல் வேதமூர்த்தி நியமனம்:இந்திய மக்களுக்காக போராடிவரும் மஇகா வை எந்த வகையிலும் பாதிக்காது – சாமிவேலு கருத்து

வேதமூர்த்தி நியமனம்:இந்திய மக்களுக்காக போராடிவரும் மஇகா வை எந்த வகையிலும் பாதிக்காது – சாமிவேலு கருத்து

507
0
SHARE
Ad

Samy Velluகோலாலம்பூர், மே 16 – புதிய அமைச்சரவையில் எதிர்பாராதவிதமாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இடம்பெற்றிருந்தாலும் கூட, இந்திய மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் மஇகா வை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்று முன்னாள் ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு தெரிவித்துள்ளார்.

“இந்திய மக்களிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி நிரூபிக்க வேண்டும் அதோடு அவர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்த வேண்டும்” என்றும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

மேலும்  “ம.இ.கா எப்பொழுதும் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற வாக்குறுதிகளை வழங்கி, அவை அனைத்தையும் முறையாக நிறைவேற்றி வருகிறது. வேதமூர்த்தியின் நியமனத்தால், இனி மஇகா வைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற இயலாது என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் அவை அடிப்படை ஆதாரங்கள் இல்லாததது” என்றும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்திய பிரதிநிதிகளில் வேதமூர்த்தியும் ஒருவர் 

புதிய அமைச்சரவையில் வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த சாமிவேலு, “இந்திய மக்களுக்கு சேவையாற்ற பிரதமர் நஜிப்பால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய தலைவர்களுள் வேதமூர்த்தியும் ஒருவர். மற்ற தலைவர்களைப் போல் அவரும் இந்திய சமுதாய மக்களுக்காக சேவையாற்றுவார்” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு புதிய அமைச்சரவையை அமைத்த நஜிப்புக்கு தனது வாழ்த்துக்களையும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

“இந்த அரசாங்கம் வித்தியாசமானது. இது மக்களுக்காக சேவைகளை செய்யக்கூடியது. இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் அனைவரும் மக்களுடன் நேரடியான தொடர்பு வைத்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவார்கள். இதனால் தேசிய முன்னணி மென் மேலும் வலுப்பெறும். பிரதமர் நஜிப் தலைமையிலான அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் சாமி வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.