கோலாலம்பூர், மே 18- உலகம் முழுவதுமே குண்டுக்குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள்.
வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் சோம்பலான வாழ்க்கையைப் பின்பற்றுவதால் குண்டுக் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
6 முதல் 19 வயதுள்ள குழந்தைகளில் 16 சதவீதம் குழந்தைகள் குண்டாக உள்ளனர்.
மலேசியாவில் கடந்த இரண்டு வருடங்களில் குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காக அதிகரிக்கும்.
குண்டுக்குழந்தைக்கு இதய நோய், ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம். இது குறித்து ஒரு ஆய்வு நம் நாட்டில் நடத்தப்பட்டது.
அதன் படி குழந்தைகளின் உயரம், எடை, ரத்த அழுத்தம், அளவிடப்பட்டதில் 15 சதவீத குழந்தைகள் மிகக் குண்டுக் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்களும் உண்டு.
பெண் குழந்தைகள் 10 வயதுக்கு முன்னே பருவம் அடைந்து விடுகிறார்கள். ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களைப்போல் மார்பகம் பெரிதாகிறது.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கோ பின்னாளில் கர்ப்பப்பை நோய்களும், எலும்புத் தேய்மானமும், மலட்டுத்தன்மையும், மாதவிடாய் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதனால் குண்டுக் குழந்தை ஆரோக்கியம் அல்ல.