Home உலகம் நான் பதவி விலக மாட்டேன்- சிரியா அதிபர் ஆசாத் பேட்டி

நான் பதவி விலக மாட்டேன்- சிரியா அதிபர் ஆசாத் பேட்டி

571
0
SHARE
Ad

Assadடமஸ்கஸ், மே 19- சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இதில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி போரிட்டு வருகின்றனர். போரில் இது வரை 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்துவதற்காக, அமெரிக்காவும் ரஷ்யாவும் சர்வதேச அமைதி மாநாட்டை நடத்த முயற்சி செய்து வருகிறது. இந்த மாநாடு அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெறும் முன் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று போராளிக் குழுக்களும், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு அதிபர் ஆசாத் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது :-

சிரியாவில் ஆட்சியிலிருந்து யார் வெளியேற வேண்டும், இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் சிரியா மக்களின் அதிகாரத்தை, அமெரிக்க வெளியுறவு மந்திரி கெர்ரியோ அல்லது வேறு ஒருவரோ பெற்றக்கொண்டதாக எனக்கு தெரியவில்லை.

நான் பதவி விலகுவது தப்பி ஓடுவதாக இருக்கும். நான் பொறுப்புகளிலிருந்து தப்பி ஓடும் ஆளில்லை. 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் சிரியா மக்கள் யார் அதிபர் என்பதை முடிவு செய்வார்கள்.

இந்த சர்வதேச மாநாடு, சிரியா மக்கள் சிக்கலான சூழ்நிலையிலிருந்து மீள உதவும் என்று நம்புகிறேன். ஆனால், சிரியா போராளிக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கிவரும் மேற்கத்திய நாடுகள் இந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே தீர்வு காண விரும்புகின்றன என்பதை நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.