சென்னை, மே 22- கோட்டை மைதானத்தில் ராஜிவ்காந்தி படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 22வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நேற்று கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரோசய்யா ராஜிவ்காந்தி படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி, கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
காலை 11.45 மணிக்கு, கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உறுதிமொழியை ஜெயலலிதா வாசிக்க, அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதி ஏற்றனர்.
முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தி படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின், ஆணையர் சோ.அய்யர் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். செயலாளர் ஜோதி நிர்மலா மற்றும் ஊழியர்களும் பங்கேற்றனர்.