Home கலை உலகம் 40-வது திருமண நாளில் தனது திருமணத்தை நினைவு கூர்ந்த அமிதாப் பச்சன்

40-வது திருமண நாளில் தனது திருமணத்தை நினைவு கூர்ந்த அமிதாப் பச்சன்

521
0
SHARE
Ad

bachanமும்பை, ஜூன் 4- மும்பை திரைப்பட உலகில் இணைந்து நடித்த பல நடிகர்- நடிகைகள் வாழ்க்கையிலும் இணைந்து வெற்றி ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும், ‘பிக் பி’ என்று குறிப்பிடப்படுபவருமான அமிதாப் பச்சன் ஆவார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த ஜெயாபாதுரியை 1973-ம் ஆண்டு, ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அமிதாப் நேற்று அவரது நாற்பதாவது திருமண நாளைக் கொண்டாடினார். இந்தத் தருணத்தில், தன்னுடைய திருமணம் நடந்த விதத்தை அவர் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயாபாதுரி 1972-ம் ஆண்டு ‘பன்சிபிர்ஜு’ என்ற படத்தில் முதன்முதலாக அமிதாபுடன் இணைந்து நடித்தார். அதே வருடத்தில் ‘எக் நசர்’ என்ற படத்தில் இருவரும் ஒன்றாகப் பணியாற்றினர். பின்னர், சஞ்சீர் திரைப்படத்தில் நடித்தபோது, அந்தப் படம் வெற்றிபெற்றால் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். அந்தப் படம் வெற்றி பெற்றதும், இந்த ஜோடியும் தங்கள் வாழ்க்கையில் இணைந்தனர்.

சாதாரண ஒரு மாலைப்பொழுதில், தன்னுடைய பெற்றோர்களையும், சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு, தான் மலபார் ஹில் பகுதிக்கு சென்றதாகவும், அங்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாகவும், விரைவாகவும் தங்கள் திருமணம் நிகழ்ந்தது என்றும் அமிதாப் குறிப்பிடுகின்றார். பெற்றோர்கள், சில நண்பர்களுடன் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களே அங்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மனைவி, இரு குழந்தைகள், மருமகன், மருமகள், மூன்று பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய இந்த வாழ்வை அளித்ததற்கு அமிதாப் கடவுளுக்கு நன்றி கூறினார். கிட்டத்தட்ட ஆயுட்காலம் முழுவதும் வாழ்ந்ததுபோல் உணருவதாக தன்னுடைய இணையதளத்தில் அமிதாப் செய்தி வெளியிட்டுள்ளார்.