கோலாலம்பூர், ஜூன் 6 – சபாவில் இன்று அதிகாலை 3.23 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது தாராக்கான், இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதிகளில் 31 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் தாவாவ், சபாவின் தென் மேற்கு பகுதிகளில் 118 கிலோமீட்டர் தொலைவிலும் உணரப்பட்டதாக ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது.
4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கம் குறித்து தாவாவ்வில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு அபாய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 3.30 மணியளவில் நிலநடுக்கம் பற்றி தகவல் அறிய பொதுமக்களிடமிருந்து நிறைய அழைப்புகள் வந்ததாகவும், இதுவரை எந்த ஒரு உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.