Home 13வது பொதுத் தேர்தல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பது குறித்து அன்வார் யோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பது குறித்து அன்வார் யோசனை

489
0
SHARE
Ad

anwar-angry-sliderகோலாலம்பூர், ஜூன் 7 – எதிர்வரும் ஜூன் 24 ஆம் தேதி 13 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத் தொடரை, நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் சட்டப்பூர்வ நிலை குறித்து எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் காரணமாக புறக்கணிப்பது பற்றி எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிந்தித்து வருகிறார். அதோடு நாடாளுமன்ற கேள்விகளை சம்ர்ப்பிக்கவும் அவர் மறுத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர்களின் பதில்களுக்காக, கேள்விகளை சமர்பிப்பதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையோடு நிறைவடைந்தது. பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம் அதில் எந்த ஒரு கேள்வியையும் சம்ர்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

“அரசியல் என்பதும் ஒரு கண்ணோட்டம் போல் தான். 13 ஆவது பொதுத்தேர்தல் கறை படிந்தது என்று நாடெங்கிலும் பரவலான கண்ணோட்டம் நிலவுகிறது. எனவே நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரைப் புறக்கணிக்க அது ஒன்றே போதுமானது” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எதிர்கட்சிகளில் அதிக இடங்களைப் பெற்றவர்களே எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார்கள். ஆனால் பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியை விட ஜசெக அதிக இடங்களைக் கைப்பற்றிய போதும் எதிர்கட்சித் தலைவராக அன்வார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வார காலக்கெடு

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பதிலுக்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு மிக அதிகம் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் நாடாளுமன்றங்களில் 3 நாட்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்படுவதாகவும், பிரிட்ஷ் மற்றும் மற்ற வளர்ந்த நாடுகளின் நாடாளுமன்றங்களில் கூட அம்முறையே பின்பற்றப்படுகிறது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

“அரசியலில் மாற்றங்களும், திருப்பங்களும் அதிவேகமாக நிகழ்ந்துவிடும். காரணம் இன்று நீங்கள் ஒரு பிரச்சனை குறித்து கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் அப்பிரச்சனை தீர்க்கப்பட்டு உங்களுக்கு பதிலளிக்கப்படும். அப்படி இருக்கையில் கேள்வி கேட்பதே அர்த்தமற்றதாகிவிடும்” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

அதோடு “கேள்விகள் கேட்பதற்கு ஒரு வார கால அவகாசமே நீண்டது என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் வில்சன் கூறியுள்ளார். எனவே இரண்டு வாரம் என்பது மிக நீண்டது” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.