Home நாடு தீர்ப்பை எதிர்த்து உதயகுமார் மேல் முறையீடு!

தீர்ப்பை எதிர்த்து உதயகுமார் மேல் முறையீடு!

649
0
SHARE
Ad

p-uthayakumar-june19ஜூன் 8 – தனக்கு எதிராக விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிண்ட்ராப் தலைவர்களுள் ஒருவரான பி.உதயகுமார் மேல் முறையீடு செய்ய முன்வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஒரு போராட்ட இயக்கமாகத் தொடங்கிய ஹிண்ட்ராப்பும் அதன் தலைவர்களும் வழக்குகளை எதிர்த்துப் போராட வேண்டும், அதை விடுத்து மௌனமாக இருந்து சிறை செல்வது ஹிண்ட்ராப் போராட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக இருக்கின்றது என்பதுதான், உதயகுமாரின் சிறைத் தண்டனை தீர்ப்பை அறிந்ததும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வரும் ஒருமனதாக கருத்தாக இருக்கின்றது.

அதனை ஆமோதிப்பது போல், உதயகுமாரின் வழக்கறிஞர், எம்.மனோகரன் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன,

உதயகுமாரின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் மொத்த கவனமும் இனி அவர் விடுதலையாவாரா என்பதை நோக்கித் திரும்பும்.

மேல் முறையீட்டின் விசாரணை நடைபெற நாளாகும் என்றாலும், மேல் முறையீடு செய்வதன் மூலம் உதயகுமார் ஜாமீன் பெற்று உடனடியாக சிறைவாசத்திலிருந்து வெளியே வர முடியும்.

அவரது ஜாமீன் வழக்கு உடனடியாக விசாரிக்கப்படும் என்பதால் அடுத்த வாரத்திலேயே அவர் ஜாமீனில் விடுதலையாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.