Home 13வது பொதுத் தேர்தல் தே.மு. 21 பொதுத் தேர்தல் வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்தது – லெம்பா பந்தாய் தொகுதியில்...

தே.மு. 21 பொதுத் தேர்தல் வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்தது – லெம்பா பந்தாய் தொகுதியில் மறு தேர்தல்?

635
0
SHARE
Ad

Tengku Adnan Tengku Mansorஜூன் 12 பொதுத் தேர்தல் தொடர்பாக சில தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்குகள் தாக்கல் செய்வோம் என எதிர் கட்சிகள் ஒரு புறம் கூறிக் கொண்டிருக்கும் வேளையில் நேற்று 21 பொதுத் தேர்தல் வழக்கு மனுக்களை தேசிய முன்னணி தாக்கல் செய்ததாக தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சோர் (படம்) பத்திரிக்கைச் செய்தியொன்றின் வழி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் அந்த தொகுதிகள் எவை என்பது குறித்து தெங்கு அட்னான் தெரிவிக்கவில்லை.

முதலில் 50 தொகுதிகள் வரை தாங்கள் வழக்கு தொடுக்க உத்தேசித்திருந்ததாகவும், இருப்பினும் நீதிமன்றங்களின் நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கக் கூடாது என்ற நோக்கிலும், சிறிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்ற நோக்கத்தாலும் தாங்கள் 21 தேர்தல் மனுக்களை மட்டுமே தாக்கல் செய்ய முடிவு செய்ததாகவும் தெங்கு அட்னான் கூறினார்.

இந்த வழக்குகளுக்கு வலுவான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதால் தங்களுக்கு சாதகமான முறையில் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விசாரிக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெங்கு அட்னான் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து அதிருப்தி உள்ளவர்கள் தங்களின் தேர்தல் வழக்குகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று புதன்கிழமை ஆகும்.

தேர்தல் வழக்குகள் சட்டத்தின் கீழ், தேர்தலில் குறிப்பிடத்தக்க முறைகேடுகள் – கையூட்டு, மிரட்டல்கள், நடைமுறை தவறுகள் போன்றவை – நிகழ்ந்திருந்தால் அதற்காக மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம்.

தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள தேர்தல் வழக்குகளில் நுருல் இசா வெற்றி பெற்ற லெம்பா பந்தாய் தொகுதி, தியான் சுவா வெற்றி பெற்ற பத்து தொகுதி ஆகியவற்றில் எதிர் கட்சிகளின் வெற்றியை எதிர்த்த வழக்குகளும் அடங்கும் என அறியப்படுகின்றது.