Home நாடு புரோட்டோன் கார்களின் விலை 10 விழுக்காடு குறைகிறது!

புரோட்டோன் கார்களின் விலை 10 விழுக்காடு குறைகிறது!

582
0
SHARE
Ad

Proton-Logoகோலாலம்பூர், ஜூன் 14 – புரோட்டோன் கார் தயாரிப்பு நிறுவனம், சந்தையில் தனது கார்களுக்கான புதிய விலைப்பட்டியலை நாளை வெளியிடவுள்ளது. அதன் படி புரோட்டோன் கார்களின் விலை இப்போதுள்ள விலையைக் காட்டிலும் 10 சதவிகிதம் குறையும் என்று  நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புரோட்டான் கார்கள் தற்போது 38,148 ரிங்கிட் முதல் 89,012 ரிங்கிட் வரை அதன் தரத்திற்கு ஏற்ற விலையில் உள்ளன. விலை குறைக்கப்பட்டாலும் அதன் தரம் குறையாது என்று புரோட்டோன் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் முகமட் கமில் ஜமில் உறுதியளித்துள்ளார்.

இந்த புதிய விலைப் பட்டியல் நாளை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முத்தியாரா டாமன்சாரா கிளையில் அறிவிக்கப்படவுள்ளன. அங்கு பொதுமக்கள் நேரடியாக கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

அடுத்த 5 ஆண்டுகளில் கார்களின் விலை 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று தேசிய முன்னணியும், பக்காத்தானும் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதே போல் பக்காத்தானும் தங்களது தேர்தல் அறிக்கையில் கார்களின் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் சுங்க வரியைக் குறைப்பதற்குப் பதிலாக அதை செய்யப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.