Home நாடு நாட்டின் பல இடங்களில் காற்றின் தரம் உயர்ந்தது! 3 இடங்களில் மட்டும் இன்னும் ஆரோக்கியமற்ற நிலை!

நாட்டின் பல இடங்களில் காற்றின் தரம் உயர்ந்தது! 3 இடங்களில் மட்டும் இன்னும் ஆரோக்கியமற்ற நிலை!

520
0
SHARE
Ad

m_haze

கோலாலம்பூர், ஜூன் 27 – இன்று காலை 7.00 மணியளவு நிலவரப்படி, நாட்டின் பல இடங்களில் புகைமூட்டத்தின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் தகவலின் படி, இன்னும் 3 பகுதிகளில் மட்டுமே காற்றில் மாசு அளவு (Air Pollutant Index -API) ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. மற்ற 36 இடங்களில் காற்றின் மாசு அளவு இயல்பு நிலையிலும், 16 இடங்களில் நல்ல நிலையிலும் உள்ளது.

#TamilSchoolmychoice

ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள அந்த மூன்று இடங்களான நெகிரி செம்பிலானில் உள்ள நீலாய், மலாக்காவில் உள்ள புக்கிட் ரம்பாய் மற்றும் சிலாங்கூரில் உள்ள பந்திங் ஆகியவற்றில் காற்றின் மாசு அளவு முறையே 144, 111, 104 (Air Pollutant Index -API) ஆகப் பதிவாகியுள்ளது.

பல இடங்களில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகைமூட்டம் குறைந்து, காற்றின் தரம் உயர்ந்தது.

இதனிடையே பினாங்கு, கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் காட்டுத் தீயின் அளவு குறைந்து வருவதால், இன்னும் சில நாட்களில் காற்றின் அளவு முற்றிலும் நல்ல நிலைக்குத் திரும்பிவிடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.