Home நாடு கோல பெசுட் இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணப்படுவதை நேரடி ஒளிப்பதிவு செய்ய அரசு யோசனை!

கோல பெசுட் இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணப்படுவதை நேரடி ஒளிப்பதிவு செய்ய அரசு யோசனை!

581
0
SHARE
Ad

shaberyகோலாலம்பூர், ஜூலை 5 – எதிர்வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, வாக்குகள் எண்ணப்படும் போது அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று  பல்லூடக அமைச்சர் அகமட் ஷாபெரி சீக் கூறியுள்ளார்.

மேலும், இந்த நேரடி ஒளிபரப்பை செய்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஆர்.டி.எம் (Radio Televisyen Malaysia -RTM) தொலைகாட்சிக்கு அனுமதி வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  ஷாபெரி சீக் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாக்குச்சாவடிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப் போகிறேன். ஆர்.டி.எம் தொலைக்காட்சி அரசாங்கத்திற்குச் சொந்தமானது அதனால் அவர்கள் அதை அனுமதிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்படும் போது மக்கள் அதை நேரடியாக தங்கள் வீட்டில் இருந்தே காணலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வாக்குச்சாவடிகளில் புகைப்படக் கருவி ‘கேமெரா’ பொருத்துவதற்கு ஏன் ஆர்.டி.எம் தொலைக்காட்சியை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தற்போது ஆர்.டி.எம் தொலைக்காட்சி தான் முன்னிலையில் உள்ளது. இந்தப் பணியை அவர்களைத் தவிர வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியாது. காரணம் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது, அதற்கு அந்த உரிமை உள்ளது” என்று ஷாபெரி சீக் தெரிவித்துள்ளார்.