கோலாலம்பூர், மே 20 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கும் துன் மகாதீருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெறுவது என்பது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தே முடிவாகும் எனத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சீக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாகக் கடந்த கால வரலாற்றை ஆராய வேண்டியுள்ளது என்றார் அவர். கடந்த காலத்தில் பிரதமராகப் பதவி வகித்த போது தனது அரசியல் எதிரிகளுக்கு மகாதீர் இதே போன்ற வாய்ப்புகளை வழங்கினாரா? என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
“கடந்த காலத்திலும் இதே போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. அந்தச் சமயங்களில் எல்லாம் துன் மகாதீர் மற்றவர்களுக்கு இதே போன்ற வாய்ப்புகளை வழங்கினாரா என்பதைச் சரிபார்க்க வேண்டியுள்ளது,” என்று செய்தியாளர்களிடம் ஷாபெரி தெரிவித்தார்.
எனினும் சம்பந்தப்பட்ட இரு தலைவர்களுக்கு இடையேயான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்ய முன்வருவாரா என்பதை அகமட் ஷாபெரி உறுதி செய்யவில்லை.