Home கலை உலகம் சென்னையில் நடைபெறவுள்ளது நோர்வே தமிழ்த் திரைப்பட விருது விழா 2015!

சென்னையில் நடைபெறவுள்ளது நோர்வே தமிழ்த் திரைப்பட விருது விழா 2015!

592
0
SHARE
Ad

ntff002சென்னை, மே 20 – உலகில் பல தமிழ்த் திரைப்பட விருது விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களுக்காக நோர்வே நாட்டில் வருடம் ஒரு முறை நடைபெறும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா தமிழர் விருது 2015’ தமிழர்களுக்கு மிகச் சிறப்பானது.

உலகில் வாழும் அனைத்துத் தமிழ்க் கலைஞர்களும் ஒன்று திரட்டி அவர்களைக் கௌரவப் படுத்துகிறது இந்த நோர்வே தமிழ்த் திரைப்பட விழா தமிழர் விருது 2015. கடந்த மாதம் 22-ஆம் தொடங்கி 26-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் இயக்குனர் வசந்தபாலன், கௌரவ் மற்றும் பிரபல நடிகை குயிலி ஆகியோர் பங்கு பெற்றுச் சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

தமிழ்க் கலைஞர் கலை ஊக்கவிக்க வேண்டும் என்ற முயற்சியோடு, மீண்டும் சென்னையில் உள்ள வடபழனி ‘ஆர்கேவி ஸ்டுடியோ’வில் வரும் 23-மாம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைப்பெறவுள்ளது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.