Home நாடு பால்கனியில் உறவு: காணொளியில் இருந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்!

பால்கனியில் உறவு: காணொளியில் இருந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்!

889
0
SHARE
Ad

Balconyகோலாலம்பூர், மே 20 – பங்சாரில் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடத்தில் (பால்கனி) உடலுறவு கொள்ளும் காணொளியில் இருந்த ஆடவரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இது குறித்து, பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் அஸ்லி அப்துல்லா கூறுகையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அந்தக் காணொளியில் இருந்த 30 வயதான ஆடவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். அவர் தனது துணையுடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகின்றார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆடவர் இன்னும் மலேசியாவில் தான் இருக்கின்றார் என்றும் முகமட் அஸ்லி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அந்தக் காணொளியைப் படம் பிடித்த நபர் யார்? அவர் எப்போது அந்தக் காணொளியைப் படம் பிடித்தார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 377டி, 297 மற்றும் 294 – கீழும், தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-ன் கீழும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

பால்கனியில் தம்பதியர் உடலுறவு கொள்வது போன்ற 30 நிமிடக் காணொளி ஒன்று அண்மையில் நட்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் காணொளியை அடுத்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் படம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.