நார்வே, மார்ச் 19 – நார்வே நாட்டில் ஒவ்வொரு வருடமும் அனைத்துலக தமிழ் திரைப்பட விழா நடைபெறும். 2014-ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்பட விழாவில் 14 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டன.
நடுவர்குழு தீர்வாக வெற்றிப் பெறும் படத்தினையும், கலைஞர்களையும் அறிவித்துள்ளது. இதன் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 26-ல் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெறவுள்ளது.
ராஜூமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி திணேஷ், மாளவிகா நாயர் நடிப்பில் வெளியான ‘குக்கூ’ திரைப்படம் சிறந்தப் படமாக தேர்வாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘காவிய தலைவன்’ படம் அதிகமான விருதுகளை அள்ளியது. வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், வேதிகா, அனைகா, ப்ரித்வி ராஜ் நடிப்பில் வெளியான காவிய தலைவன் படம் ஆறு விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகராக சித்தார்த், சிறந்த நடிகையாக வேதிகா, சிறந்த இயக்குநராக வசந்தபாலன், சிறந்த துணை நடிகையாக குயிலி, துணை நடிகராக நாசர் மற்றும் சிறந்த பாடகராக – ஹரிசரண் ஆகியோரும் விருதுகளை பெற்றுள்ளனர்.