Home நாடு அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றம் அனுமதித்தால் நேரலையாக ஒளிபரப்பப்படும் – ஷாபெரி சீக்

அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றம் அனுமதித்தால் நேரலையாக ஒளிபரப்பப்படும் – ஷாபெரி சீக்

506
0
SHARE
Ad

Datuk-Seri-Ahmad-Shabery-Cheek

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – கூட்டரசு நீதிமன்றத்தில் நடக்கவுள்ள பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதில் தனது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பல்லூடகம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அகமட் ஷாபெரி சீக் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு முன்பு பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், நிச்சயம் இது நடக்காத காரியம் என்றும் ஷாபெரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நேரலையாக ஒளிபரப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அது நீதிமன்றத்தின் அனுமதியைப் பொறுத்து தான் செய்ய முடியும்” என்று புத்ரா ஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஷாபெரி தெரிவித்தார்.

கடந்த 13 வது பொதுத்தேர்தலின் போது, வாக்குகள் எண்ணப்படுவதை நேரலையாக ஒளிபரப்பும் படி கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. எனினும் அந்த கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கை அரசாங்கம் தொலைக்காட்சியில் நேரலையாகக் காட்டுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நிச்சயமாக அதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்காது என்று ஷாபெரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி வெளியிட்ட கருத்தில், அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கை நேரலையாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அப்போது தான் அன்வாருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அரசியல் சதி வெளியுலகிற்கு தெரியவரும் என்றும் அஸ்மின் அலி குறிப்பிட்டிருந்தார்.