லக்னோ, மே 20 – ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.ஐ–873 என்ற விமானம் டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு நேற்று காலை புறப்பட்டது. இதில் 169 பயணிகள் பயணம் செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராகோ பகுதி அருகே விமானம் பறந்து கொண்டிந்த போது விமானத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதை உணர்ந்த விமானி உடனடியாக அவர் லக்னோ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார்.
இதைத் தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். இதையடுத்து விமானம் அவசரமாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் 169 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.