Home கலை உலகம் ‘புலி’ படப்பிடிப்பின் போது கிராம மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய விஜய்!

‘புலி’ படப்பிடிப்பின் போது கிராம மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய விஜய்!

588
0
SHARE
Ad

?????????????????????????????????????????????சென்னை, மே 20 – விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு கடைசியாக தாய்லாந்தில் உள்ள புலி கோவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

படப்பிடிப்பின்போது நடிகர், நடிகைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.  இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களும் தற்போது வெளியாகி வருகிறது.

அதாவது, ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் தலக்கோணம் பகுதியிலும் நடைபெற்றது. அங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் இந்த படப்பிடிப்பை நடத்தினர். கிட்டத்தட்ட 40 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்தது.

#TamilSchoolmychoice

பெரும்பாலும் வெளியூர்களில் படப்பிடிப்பு என்றால், விஜய் நட்சத்திர தங்கும் விடுதிகளில் தான் தங்குவாராம். ஆனால், இந்த படப்பிடிப்பின்போது விஜய், எந்த நட்சத்திர ஓட்டலுக்கும் செல்லாமல், அந்த பகுதி கிராம மக்களின் வீட்டிலேயே தங்கினாராம்.

மேலும், அந்த பகுதி மக்களுடன் அன்பாக பேசி, மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளாராம். இது அந்த பகுதி மக்களை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இவ்வளவு பெரிய நடிகர் தங்களிடம் இவ்வளவு சாதாரணமாக பழகுகிறாரே? என்று அனைவரும் அவரை பார்த்து வியந்து போயுள்ளனர்.

மேலும், அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்திவிட்டு கிளம்பும்போது, விஜய் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாராம்.