Home நாடு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய மலேசியருக்கு வலைவீச்சு – சாகிட் ஹமிடி

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய மலேசியருக்கு வலைவீச்சு – சாகிட் ஹமிடி

552
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர், மே 20 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள மலேசியர் ஒருவர் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 7 பேர் மலேசியா
திரும்பியுள்ளனர் என்றும், அவர்களில் தேடப்படும் அந்த நபரும் அடங்குவார்
என்றும் அவர் கூறினார்.

“நாடு திரும்பிய அந்த 7 பேரில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரைப் போலிசார் தேடி வருகிறார்கள்,” என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் சாகிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மே 7ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் 154
மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 91 பேர் கைதாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சர்ச்சைக்குரிய போர்ப் பகுதிகளில் 45 பேர் உள்ளனர். 11 மலேசியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்
வெவ்வேறு தரப்பட்ட வயதினர்களாக உள்ளனர். ஒன்று முதல் 60
வயதுக்குட்பட்டவர்களும் இதில் அடங்குவர். குழந்தைகளும் இத்தகைய
செயல்களில் ஈடுபடுத்தப்படுவது அரசுக்கு கவலை அளிக்கிறது,” என்று சாகிட்
ஹமிடி மேலும் தெரிவித்துள்ளார்.