Home இந்தியா ஐ.பி.எல்-8: இன்று பெங்களூர்-ராஜஸ்தான் மோதும் இரண்டாம் தகுதி சுற்று!

ஐ.பி.எல்-8: இன்று பெங்களூர்-ராஜஸ்தான் மோதும் இரண்டாம் தகுதி சுற்று!

554
0
SHARE
Ad

iplபுனே, மே 20 – ஐ.பி.எல்-8-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவும் அணி போட்டியை விட்டு வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாது. ராஞ்சியில் 22-மாம் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் சென்னை அணியுடன் விளையாட வேண்டும்.

அதில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணிதான் கொல்கத்தாவில் 24-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

#TamilSchoolmychoice

இந்த ஐபிஎல் போட்டி வரலாற்றில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 7 வெற்றி பெற்றுள்ளன.

ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்த ஐ.பி.எல்-8ந் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை எளிதில் வென்றது. மற்றொரு லீக் ஆட்டம் மழையால் ரத்தானது.

இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தரமான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. மலேசிய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கிறது இந்த போட்டி.