Home இந்தியா ஐபிஎல்-8: தனக்கு கொடுத்த ஆட்டநாயகன் விருதை மன்தீப்புக்கு வழங்கிய டி.வில்லியர்ஸ்!

ஐபிஎல்-8: தனக்கு கொடுத்த ஆட்டநாயகன் விருதை மன்தீப்புக்கு வழங்கிய டி.வில்லியர்ஸ்!

650
0
SHARE
Ad

Mandeep-Singh-RCB-IPL--2015புனே, மே 21 – நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர்-ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்திருந்த நிலையில், டிவில்லியர்ஸ்– மன்தீப்சிங் ஜோடி சேர்ந்த அதிரடியாக விளையாடினர்.

அவர்கள் இருவரும் 113 ரன் சேர்த்தனர். இதனால் பெங்களூர் 180 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 66 ரன்னும் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), மன்தீப்சிங் 54 ரன்னும் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

de-villiers-mandeepஆட்டநாயகன் விருது டி.வில்லியர்சுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை அவருடன் ஜோடி சேர்ந்த அதிரடியாக விளையாடி மன்தீப்சிங்குக்கு வழங்கினார். இதுகுறித்து டி.வில்லியர்ஸ் கூறுகையில்;

#TamilSchoolmychoice

“மன்தீப்சிங் ஆட்டம் ஆட்டநாயகன் விருதுக்கு உரியது. அந்த விருது அவருக்கு தான் செல்ல வேண்டும். அடுத்த போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறோம். அவர்களுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார் டி.வில்லியர்ஸ்.