காஜாங், மே 21 – தீவிரவாத செயல்களை ஊக்குவித்ததாக 17 வயது நபர் உட்பட 6 பேர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
போராளிகள் என சந்தேகிக்கப்படும் இந்த 6 பேரும் அரசு கட்டடங்கள், இரவு விடுதிகள் மற்றும் இதர கேளிக்கை மையங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் திட்டம் தொடர்பில் 6 பேரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஐந்து பேர், 22 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 17 வயதே ஆன ஆறாவது நபரின் பெயர் மற்றும் இதர விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 30 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து
மாஜிஸ்திரேட் அப்துல் ஜலீல் உத்தரவிட்டார்.
கடந்த மாதம் உலுலங்காட்டில் வெடிகுண்டுகள் உருவாக்க தேவையான ரசாயனக்
கலவையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 பேரை புக்கிட் அமானின்
தீவிரவாத தடுப்புப் பிரிவின் சிறப்பு படையினர் கைது செய்தனர்.
500 மீட்டர் பரப்பளவிற்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய வெடிபொருட்களை தயாரிப்பதற்கான பொருட்கள் இவர்களிடம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையை அடுத்து இக்குழுவின் மூத்த தலைவர் ஒருவர் செராசில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.