Home இந்தியா ஐபிஎல்-8: இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? இன்று சென்னை-பெங்களூர் அணிகள் மோதல்!

ஐபிஎல்-8: இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? இன்று சென்னை-பெங்களூர் அணிகள் மோதல்!

660
0
SHARE
Ad

ipl-csk vs rcbராஞ்சி, மே 22 – ஐபிஎல்-8 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதைத்  தீர்மானிக்கும் பரபரப்பான ஆட்டம், ராஞ்சியில் இன்று இரவு மலேசிய நேரப்படி 10.30 மணிக்கு நடக்கிறது.

இதில்,சென்னை அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. சொந்த மண்ணில் களமிறங்கும் சென்னை அணி கேப்டன் டோனி, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் லீக் போட்டியில் அசத்தி, முதல் இடத்தைப் பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை அணி, மும்பை அணியுடன் தோற்று, இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டது.

#TamilSchoolmychoice

இதனால், மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி காலிறுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வென்று அசத்தியது.

இதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்சுடன் மோதப் போவது சென்னையா, பெங்களூரா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய போட்டி ராஞ்சியில் இன்று நடக்க உள்ளது. சென்னை அணியைப பொருத்த வரையில் லீக் சுற்றில் பெங்களூருக்கு எதிரான 2 போட்டியிலும் வென்றுள்ளது.

ஆனாலும், லீக் சுற்றில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம், இங்கிலாந்து தொடருக்காகத்  தனது அணிக்குத் திரும்பி உள்ளார். அவர் இல்லாதது சென்னை அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

டுபிளஸ்சிஸ், ரெய்னா, பிராவோ, டோனி ஆகியோரையே பேட்டிங்கில் அதிகம் நம்பி உள்ளது. இம்முறையாவது ஸ்மித் நல்ல தொடக்கத்தைத் தர வேண்டியது அவசியம்.  பந்துவீச்சில் நெஹ்ரா, ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்டோர் சிறப்பாக உள்ளனர்.

அதே சமயம், பெங்களூரில் கேயில், கோலி, டிவில்லியர்ஸ், மன்தீப் சிங் என அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். ராஜஸ்தானுக்கு எதிராக டிவில்லியர்ஸ், மன்தீப் சிங் பிரமாதமாக ஆடியிருக்கிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல.

எனவே, சென்னை வீரர்கள் பேட்டிங்கில் அதிக ரன்னைக் குவிப்பதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியம். சொந்த மண்ணில் டோனி களமிறங்குவதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.