Home இந்தியா ஐபிஎல்-8: நடுவரின் தீர்ப்புக்கு எதிராக தோனி கருத்து – சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம்!

ஐபிஎல்-8: நடுவரின் தீர்ப்புக்கு எதிராக தோனி கருத்து – சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம்!

900
0
SHARE
Ad

maxresdefaultபுதுடெல்லி, மே 20 – ஐ.பி.எல்.-8ன் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்த போது, துவக்க ஆட்டக்காரர் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். மலிங்கா வீசிய அந்த பந்து ஸ்டெம்புக்கு வெளியே செல்வது காணொளியில் தெளிவாக தெரிந்தது.

இதனால், கோபமான சென்னை அணி கேப்டன் தோனி, போட்டியின் முடிவில் பேசும்போது, “சுமித்துக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ முடிவு மிகவும் கொடூரமானது. இதை எங்களால் மறக்க இயலாது” என தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது ஐ.சி.சி. விதிப்படி முதல் நிலை குற்றமாகும். எனவே தோனிக்கு போட்டிக்கான சம்பளத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.