Home இந்தியா ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்பா?

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்பா?

548
0
SHARE
Ad

arun jettly -jayalalithaசென்னை, மே 20 – தமிழகத்தின் முதல்வராக மீண்டும் மே 23-ஆம் தேதியன்று ஜெயலலிதா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வராக மீண்டும் பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டு வந்தார்.

இதன் முதல் கட்டமாக மே 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

#TamilSchoolmychoice

சொத்துக் குவிப்பு வழக்கில் 21 நாள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் கடந்த 7 மாதங்களாக கட்சித் தொண்டர்கள் யாரையும் ஜெயலலிதா நேரில் சந்திக்கவில்லை. 7 மாதங்களுக்குப் பின்னர் மே 22-ஆம் தேதி முதல் முறையாக கட்சித் தொண்டர்களை ஜெயலலிதா சந்திக்க இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மே 23-ஆம் தேதியன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவருடன் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர்.

இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.