Home உலகம் டிவிட்டரில் 5 மணி நேரத்தில் 1 மில்லியன் ரசிகர்கள் – ஒபாமா கின்னஸ் சாதனை

டிவிட்டரில் 5 மணி நேரத்தில் 1 மில்லியன் ரசிகர்கள் – ஒபாமா கின்னஸ் சாதனை

590
0
SHARE
Ad

Untitledவாஷிங்டன், மே 20 – ஆறு ஆண்டுகளாக டிவிட்டரில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சில நாட்களுக்கு முன்பு @POTUS என்ற பெயரில் கணக்குத் துவங்கினார்.

ஒபாமா கடந்த மே 18-ம் தேதி டிவிட்டரில் கணக்குத் துவங்கிய 5 மணிநேரத்தில் 1 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்ததால் தற்போது அது கின்னஸ் சாதனை ஆகியுள்ளது.

தற்போதைய நிலவரப்பட்டு 2.14 மில்லியன் ரசிகர்களை அவரைப் பின்தொடர்கிறார்கள்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, அயர்ன் மேன் படத்தில் நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் தான் கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் ட்விட்டரில் கணக்குத் துவங்கிய 23 மணிநேரம் 22 நிமிடங்களில், சுமார் 1 மில்லியன் ரசிகர்களைப் பெற்றார்.

தற்போது அந்த சாதனையை ஒபாமா முறியடித்துள்ளார்.

அது சரி.. ஒபாமாவின் மனைவியான மிச்சல் ஒபாமா டிவிட்டர் கணக்கின் பெயர் என்ன தெரியுமா? @FLOTUS.

தனது கணவர் @POTUS என்ற பெயரில் கணக்குத் துவங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்த மிச்சேல் ஒபாமா, “Hey,@POTUS ! This is how you #GimmeFive, FLOTUS-style…” என்று பதிவிட்டுள்ளார்.