கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, இந்த வருடமும் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
8 தொடரில் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி, 4 முறை பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல் இரண்டாம் இடத்தைப் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 10 கோடி வழங்கப்பட்டது. இந்த தொகையை கேப்டன் தோனி பெற்றுக்கொண்டார்.
அதேபோல், அதிக விக்கெட்டுகளை எடுத்த சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோவிற்கு ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது.