வாஷிங்டன், மே 25 – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி வலுத்துள்ளதால் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் இணையத்தள ஆவணங்களை ஒபாமா அரசு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக ஒபாமா போட்டியிட இயலாது. அவரது குடியரசு கட்சியை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட உள்ளார்.
எனவே ஹிலாரியும் தீவிரமாக ஆதரவு திரட்டும் வேலையில் இறங்கியுள்ளார். எனவே இரண்டு தரப்புக்கும் நடுவே அரசியல் போட்டி வலுத்துள்ளது.
இந்த சூழலில் முந்தைய அரசில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அனைத்துலக நாடுகளுடன் பரிமாறிக் கொண்ட 296 இணையத்தள (இ-மெயில்) கடிதங்களை ஒபாமா அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
மேலும் அவற்றில் முக்கிய சாராம்சங்களில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் வெளியிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த கடிதங்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு லிபியா மற்றும் பெங்காசி ஆகிய நாடுகளில் நடைபெற்ற போருக்கு பிறகு பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் ஆகும்.
அந்த தருணத்தில் லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தூதர் உள்ளிட்ட 4 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறின.
எனவே இந்த கடிதங்களை வெளியிட்டுள்ளதால் ஹிலாரிக்கு இது அரசியல் ரீதியான பின்னடைவை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் அதற்கு மாறாக, இதுகுறித்து ஹிலாரி தரப்பு கூறுகையில், “இவற்றை வெளியிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, மொத்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கடிதங்களை பரிமாறிக் கொண்டிருந்தார். அவற்றில் மிக முக்கியமானவையாக இந்த 296 கடிதங்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.