Home உலகம் அதிபர் தேர்தலில் முறைகேடா? – டிரம்ப் மகன் மீது குற்றச்சாட்டு!

அதிபர் தேர்தலில் முறைகேடா? – டிரம்ப் மகன் மீது குற்றச்சாட்டு!

1011
0
SHARE
Ad

Trumpsonவாஷிங்டன் – 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தனது தந்தை டொனால்டு டிரம்புக்கு எதிராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ஜான் டிரம்ப் ரஷிய வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஹிலாரியின் தோல்விக்கு ரஷியாவின் தலையீடு இருந்ததாகவும், அதற்காகத் தான் ஜான் ரஷிய வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் படி, ஜனநாயக கட்சி கோரி வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அதிபர் டிரம்ப் சார்பில் அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் ஜாய் செல்லோவ் கூறியிருப்பதாவது:-

“ரஷிய வழக்கறிஞருடனான சந்திப்பு குறித்து ஜான் ஏற்கனவே விளக்கமளித்துவிட்டார். அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன. அச்சந்திப்பு சட்டவிரோத செயல் அல்ல. அது பற்றி விசாரணை செய்யத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.