அதிலும், சினிமா, அரசியல் இரண்டிலும் இந்த சமூக வலைதளங்களின் பங்குகள் மிக அதிகமாகவே உள்ளன. இதை உணர்ந்த ரஜினி, கமல், விஜய், சூர்யா என அனைவரும் இப்போது தங்களுக்கென டுவிட்டர் பக்கங்களை சமீபத்தில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர்த்து தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், அனிருத், விஷால், திரிஷா, ஹன்சிகா, விக்ரம் பிரபு , ஏ.ஆர்.ரஹமான், கௌதம் மேனன், என பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தினமும் தங்களது படம் மற்றும் இதர தகவல்கள் என பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் வரிசையில் தற்போது ஆர்யாவும் டுவிட்டரில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஆர்யா இவ்வளவு நாள் டுவிட்டரில் இணையாதது ஆச்சர்யமே. நேற்று துவங்கிய ஆர்யாவின் டுவிட்டர் பக்கத்துக்கு இதுவரை 7,789 பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
மேலும் இதுவரை ’யட்சன்’ முன்னோட்டம், ‘பெங்களூரு டேய்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு, பார்வதி உள்ளிட்ட குழுவுடன் எடுத்த புகைப்படம் என ஆர்யாவும் 11 டுவீட் செய்துள்ளார்.
மேலும் அவர் குறித்து இனிவரும் கிசுகிசுக்கள், சர்ச்சைகள், செய்திகள் என உடனடியாக மற்ற டுவிட்டர் நடிகர்கள் போல் வெளிப்படையான பதில்களை ஆர்யாவிடம் எதிர்பார்க்கலாம்.