Home One Line P2 சர்பாட்டா பரம்பரை: குத்துச்சண்டை வீரராக ஆர்யா

சர்பாட்டா பரம்பரை: குத்துச்சண்டை வீரராக ஆர்யா

851
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவின் எதிர்பார்க்கப்படும் படத்தின் முதல் தோற்றம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. ‘சர்பட்டா பரம்பரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.

முதல் தோற்றத்தில், ஆர்யா குத்துச்சண்டை வளையத்தில் தனது எதிரியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பது போல படம்பிடிக்கப்பட்டுள்ளது. கீழே பார்வையாளர்கள் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள்.

இப்படத்தின் முதல் தோற்றத்தை பா.ரஞ்சித் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்பதிவுடன், “இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா” எனும் வாக்கியத்தையும் ரஞ்சித் இணைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆர்யா தனது பாத்திரத்திற்காக முழுமையான உடல் மாற்றத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் இப்படத்திற்காக உடற்பயிற்சிகளையும், அது தொடர்பான காணொலிகளையும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

பா.ரஞ்சித்துக்கும் ஆர்யாவுக்கும் இடையிலான முதல் திரைப்படம் இதுவாகும். நடிகர்கள் சந்தோஷ் பிரதாப் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.