Home One Line P1 ‘மோங்கின் ஆபாச சைகை செய்ததை நான் பார்க்கவில்லை’-அசார் அசிசான்

‘மோங்கின் ஆபாச சைகை செய்ததை நான் பார்க்கவில்லை’-அசார் அசிசான்

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணை அமைச்சர் வில்லி மோங்கின் மக்களவையில் ஆபாச சைகை காட்டியதாகக் கூறி தீர்ப்பளிக்க சபாநாயகர் அசார் அசிசான் மறுத்துவிட்டார்.

நேற்று அசார் தலைமையில் நடைபெற்ற அமர்வின் போது, மோங்கின் தனது நடு விரலை காட்டியதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

ஆயினும், தாம் அவ்வாறு செய்யவில்லை என்று மோங்கின் மறுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நேற்று நான் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை. ஏனென்றால் என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அவரது (மோங்கின்) விளக்கத்தைக் கேட்டு, மேலும் விளக்கத்தை அவரிடம் கேட்டபின், துணை அமைச்சர் அதைச் செய்யவில்லை என்று மறுத்தார். காணொலியில் கூட , நான் பலமுறை பார்த்தேன், ஆனால் சம்பவம் நடந்ததா இல்லையா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை,” என்று அசார் கூறினார்.

இவ்வாறு மோங்கினின் ஆபாச சைகை குறித்து குற்றம் சாட்டும் நாடாளுமன்ற உறுப்புனர்கள், நாடாளுமன்றக் குழுவின் முன் ஒரு தீர்மானத்தைத் தாக்கல் செய்யுமாறு அசார் அசிசான் கோரினார்.

நேற்று, தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துணை அமைச்சர் வில்லி அனாக் மோங்கின் உரை நிறைவேற்றப்பட்டதும், நாடாளுமன்றத்தில் சர்ச்சை எழுந்தது.

புஞ்சாக் போர்னியோ நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ‘துரோகி’ என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அவர்களில் சிலர், அனாக் மோங்கின் நடு விரலைக் காட்டியதாகக் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஹ்மி பாட்சில் மற்றும் கஸ்தூரி பட்டு ஆகியோர் சமூக ஊடகங்களில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.