Home கலை உலகம் குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்!

குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்!

606
0
SHARE
Ad

sivakarthikeyanசென்னை, மே 22 – நடிகர்கள் படங்களில் நடிக்கிறார்களோ இல்லையோ விளம்பரத்தில் நடித்துவிடுகிறார்கள். ஆனால் எந்த விளம்பரத்தில் நாம் நடிக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘எதிர்நீச்சல்’ படம் வெளியான சமயத்தில் பிரபல குளிர்பான நிறுவனத்திலிருந்து விளம்பரத்தில் நடிக்க அணுகியிருக்கிறார்களாம். ஆனால் இவர் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். அடுத்தடுத்து இவர் நடித்த ஒவ்வொரு படங்களும் வெற்றி பெருவதால்’ இவருக்கு விளம்பர வாய்ப்பும் அதிகமாக வருகிறதாம்.

சமீபத்தில் ஒரு குளிர்பான நிறுவனத்திலிருந்து நடிக்க கேட்டிருந்தார்களாம். ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்குக் கேடு விளைவிக்கும் எந்த விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

#TamilSchoolmychoice

“குளிர்பான நிறுவனத்திற்கான விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சிவகார்திகேயனின் ரசிகர் டுவிட் செய்ய, அதை மறு டுவிட் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.