Home இந்தியா டெல்லியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் – சோனியா, ராகுல்காந்தி அஞ்சலி!

டெல்லியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் – சோனியா, ராகுல்காந்தி அஞ்சலி!

767
0
SHARE
Ad

Veer_Bhumi_1905859f2014-tamilagam360.com_டெல்லி, மே 21 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்தபோது தற்கொலைத்  தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21–ஆம் தேதியைத்  தீவிரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். ராஜீவ்காந்தியின் 24–வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

டெல்லியில் வீர்பூமிப் பகுதியில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினார்கள்.

#TamilSchoolmychoice

தேச பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இன்று ராஜீவ் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியைப் போல பல்வேறு மாநிலங்களிலும் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ராஜீவ் சிலைகளுக்குக் காங்கிரஸ் மாநிலத்  தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.