Home இந்தியா இரு மத்திய அரசு விருதுகளில் இருந்து இந்திரா, ராஜீவ் காந்தி பெயர்கள் நீக்கம்!

இரு மத்திய அரசு விருதுகளில் இருந்து இந்திரா, ராஜீவ் காந்தி பெயர்கள் நீக்கம்!

759
0
SHARE
Ad

indira-gandhi10_102911010055புதுடெல்லி, ஏப்ரல் 22 – இந்தி மொழியைப் பிரச்சாரம் செய்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு அளிக்கும் 2 விருதுகளின் பெயர்களில் இருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ள தகவல், “இந்திரா காந்தி ராஜ்பாஷா புரஸ்கார்’, “ராஜிவ் காந்தி ராஷ்ட்ரீய கியான்-விஞ்ஞான் மெளலிக் புஸ்தக் லேகான் புரஸ்கார்’ என்ற பெயர்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த விருதுகளின் பெயர்கள், “ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்’, “ராஜ்பாஷா கெளரவ் புரஸ்கார்’ என மாற்றப்பட்டுள்ளன.

நிர்வாக ரீதியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இரண்டு முன்னாள் பிரதமர்கள் பெயரிலும் நான்கு பிரிவுகளில் வழங்கப்பட்டு வந்த விருதுகள் இரண்டு விருதுகளாக இணைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்தியில் அறிவு, அறிவியல் பூர்வமான புத்தகங்களை எழுதும் இந்தியர்களுக்கும், ஈந்தியில் சிறந்த புத்தகம், கட்டுரை எழுதும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் “ராஜ்பாஷா கெளரவ் புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. இந்தி மொழியை பல்வேறு தளங்களில் மேம்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு “ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜு வெளியிட்ட அறிக்கையில், “இந்த விருதுகளில் முன்னாள் பிரதமர்களின் பெயர்களை நீக்கியது மத்திய அரசு நிர்வாக ரீதியாக எடுத்த நடவடிக்கை என்றும், இதில் அரசியல் தொடர்பு இல்லை என்றும்” தெரிவித்துள்ளார்.

விருதுகளின் பெயர் மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. மோடி அரசு மிகவும் குறுகிய நோக்குடனும், அரசியல் காரணங்களாலும் இதுபோன்ற சிறுமையான காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.