Home நாடு தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் – காலிட் அபுபக்கர்

தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் – காலிட் அபுபக்கர்

733
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – உணர்வுப்பூர்வமான விவகாரங்களை உள்ளடக்கி இருப்பதால், தாமான் மேடான் தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் என்று அனைத்து தரப்பையும் கேட்டுக் கொள்வதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர் கூறியுள்ளார்.

Khalid Abu Bakar

அது முடிந்து போன விவகாரம் என்பதால் அதுகுறித்து மேற்கொண்டு விவாதிக்க வேண்டியதில்லை என்றார் அவர்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து அளிக்கப்படும் எந்த புகாரையும் விசாரிப்போம் என உறுதி அளிக்கிறேன்,” என்றார் காலிட் அபுபக்கர்.

இன மற்றும் மத உணர்வுகளுடன் யாரும் விளையாடக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் அது கேடாய் முடிந்துவிடும் என்று தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.